சேர்க்கை விவரங்கள்

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, பட்டரைப்பெரும்புதூர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  சேர்க்கை அறிவிப்பு பல்கலைக்கழகம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககம், சென்னை மூலம் எல்எல்பி மற்றும் எல்.எல்.எம். பட்ட படிப்புகளுக்கு முறையே வழங்கப்படும். வழங்கப்படும் படிப்புகள் பின்வருமாறு,

  1. மூன்று வருட எல்.எல்பி., பட்டம்
  2. இரண்டு வருட எல்.எல்எம்., ( நான்கு சிறப்பு பட்டப்படிப்புகள்)

அ) எல்எல்எம் வணிக சட்டம்

ஆ) எல்எல்எம் குற்றவியல் சட்டம்

இ) எல்எல்எம் சொத்து சட்டம்

ஈ) எல்எல்எம் தொழிலாளர் சட்டம்

மூன்று வருட எல்எல்பி பட்டப்படிப்பு

சேர்க்கை அறிவிப்பு மற்றும் கலந்தாய்வு

சட்டக்கல்வி  இயக்ககம்  சார்பில் சேர்க்கை அறிவிப்பு மற்றும் கலந்தாய்வு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்.

சேர்க்கைக்கான தகுதி

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இளங்கலை பட்டப்படிப்பு 10 +2+3 அல்லது 11+1+3 முறையில் முடித்தவர்கள் மட்டுமே சேர்க்கைக்கு தகுதியானவர்கள் . தமிழ்நாடு அரசின் சேர்க்கை கொள்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் சேர்க்கை கொள்கை மற்றும் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும்.  விண்ணப்பதாரர் இளங்கலை பட்ட படிப்பினை தமிழ் நாட்டில்  உள்ள ஏதேனும் பல்கலைக்கழகங்களில் அல்லது  இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் உறுப்பினர் பல்கலைக்கழகங்கல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெற்றிருக்க  வேண்டும் மற்றும் அந்த  இளங்கலை பட்டம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால்  ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

தகுதியான குறைந்தபட்ச மதிப்பெண்கள்

எல்எல்பி சேர்க்கை பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள். எஸ்சி அல்லது எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 40% சதவீதம் இதர வகுப்பினர்   அனைவரும் 45%. சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

எல்எல்பி சேர்க்கைக்கு வயது வரம்பு இல்லை.

மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை

மூன்று வருட எல்எல்பி க்கு மொத்தம் 321 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன  சேர்க்கை இடங்கள்

தமிழக அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திருத்தத்திற்கு உட்பட்டது.

பாடநெறி காலம்

ஆறு பருவங்கள் கொண்ட மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு

இரண்டு வருட எல்எல்எம் பட்டப்படிப்பு

சேர்க்கை அறிவிப்பு மற்றும் கலந்தாய்வு

சேர்க்கை அறிவிப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை சட்டக்கல்வி  இயக்ககத்தால் நடத்தப்படும். கலந்தாய்வு சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பட்டரைப்பெரும்புதூர் வளாகத்தில்  நடைபெறும்.

இரண்டு வருட எல்எல்எம் சேருவதற்கான தகுதி

இரண்டு வருட முழு நேர எல்எல்எம்., சேர்க்கை மூன்று/ஐந்து ஆண்டுகள்  பி எல்.அல்லது எல்.எல்.பி. அல்லது பி.எல். (ஹானர்ஸ்.) அல்லது எல்.எல்.பி. (ஹானர்ஸ்) அல்லது அதற்கு சமமான இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும்

தகுதியான குறைந்தபட்ச மதிப்பெண்கள்

எல்எல்எம் சேர்க்கை பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள். எஸ்சி அல்லது எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 45%  சதவீதம், இதர வகுப்பினர்   அனைவரும் 50%  . சதவீதம் பெற்றிருக்க வேண்டும் .

வயது வரம்பு

எல்எல்எம்  சேர்க்கைக்கு வயது வரம்பு இல்லை.

மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை

ஒவ்வொரு துறைக்கும் மொத்தம் 20 இடங்கள் மற்றும் மொத்தமாக எல்எல்எம்  சேர்க்கைக்கு 80 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சேர்க்கை இடங்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திருத்தத்திற்கு உட்பட்டது.

பாடத்தின் காலம்

நான்கு பருவங்கள் கொண்ட இரண்டு வருட முழு நேர பட்டப்படிப்பு.