இந்த வளாகத்தில் சுமார் 1200 மாணவர்கள் மூன்றாண்டு இளங்நிலை சட்டப்படிப்பு மற்றும் இரண்டாண்டு முதுநிலை சட்டப்படிப்பு படிக்கின்றனர். வகுப்பறைகள் மற்றும் இதர கட்டிடங்கள் சுமார் 15.56 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ. 57.41 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

நமது சட்டக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, அகில இந்திய பார் கவுன்சிலின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படியும் சர்வதேச தரத்தில் செயல்பட்டு வருகிறது. கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், இந்த வளாகமானது, உலகளவிலான வரலாற்றுத் தீர்ப்புகளை ஆய்வு செய்யும் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளை உள்ளடக்கியது. மேலும் 2000க்கும் மேற்பட்ட வாசகர்களுக்கு இடமளிக்கும் உயர் தொழில்நுட்ப நூலகம், மாதிரி நீதிமன்றம், குளிரூட்டப்பட்ட அரங்கமும், 1300 மாணவர்கள்/பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் கூடிய உட்புற மற்றும் வெளிப்புற அரங்கங்களும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி விடுதிகளும், ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிக்கான துணை வார்டன்களுக்கான இரண்டு குடியிருப்புகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளும், வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், பயோ மெட்ரிக் மற்றும் வைஃபை வசதிகளையும்
கொண்டுள்ளது.