விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண்கள்அடிப்படையில் இணையவழி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாடு அரசின் சேர்க்கை கொள்கையின் அடிப்படையில், இடஒதுக்கீட்டு விதிகளின்படி, தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் சேர்க்கை கொள்கை மற்றும் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும்.  விண்ணப்பதாரர், தனது இளங்கலை பட்ட படிப்பினை தமிழ்நாட்டில்  உள்ள ஏதேனும் பல்கலைக்கழகங்களிலோ அல்லது  இந்திய பல்கலைக்கழகங்களிலோ அல்லது பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு கல்லூரிகளிலோ அல்லது நிகர்நிலை
பல்கலைக்கழகங்களிலோ பட்டம் பெற்றிருக்க  வேண்டும். மேலும், அந்த  இளங்கலை பட்டம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தகுதியான குறைந்தபட்ச மதிப்பெண்கள்

மூன்றாண்டு இளநிலைபட்டப்படிப்பில் சேர்க்கை பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் : எஸ்சி அல்லது எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 40% சதவீதம்; இதர வகுப்பினர்   அனைவரும் 45% சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

மூன்றாண்டு இளநிலைபட்டப்படிப்பு சேர்க்கைக்கு வயது வரம்பு இல்லை.

மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை

மூன்றாண்டு இளநிலைபட்டப்படிப்பிற்கு மொத்தம் 321 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன

* சேர்க்கை இடங்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திருத்தத்திற்கு உட்பட்டது.

பாடநெறி காலம்

ஆறு பருவங்கள் கொண்ட மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு

இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்பு:
சேர்க்கை அறிவிப்பு மற்றும் இணையவழி கலந்தாய்வு சென்னை சட்டக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும்.

இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான தகுதி

இரண்டாண்டு முழு நேர முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கை மூன்று / ஐந்து ஆண்டுகள் பி.எல்./எல்எல்.பி./பி.எல்.(ஹானர்ஸ்.)/எல்எல்.பி.(ஹானர்ஸ்) அல்லது அதற்கு சமமான இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும்

தகுதியான குறைந்தபட்ச மதிப்பெண்கள்

இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள்: எஸ்சி அல்லது எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 45% சதவீதம்; இதர வகுப்பினர்   அனைவரும் 50%  சதவீதம் பெற்றிருக்க வேண்டும் .

வயது வரம்பு

இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்பு  சேர்க்கைக்கு வயது வரம்பு இல்லை.

மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை

ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் மொத்தம் 20 இடங்கள். மொத்தமாக எல்எல்.எம்  சேர்க்கைக்கு 80 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

*சேர்க்கை இடங்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திருத்தத்திற்கு உட்பட்டது.

பாடத்தின் காலம்

நான்கு பருவங்கள் கொண்ட இரண்டு வருட முழு நேர பட்டப்படிப்பு.