கல்வி நிறுவனமானது சிறந்து விளங்கிட நூலகம் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இக்கல்லூரியின் முதுகெலும்பாக நூலகம் திகழ்கிறது. இக்கல்லூரி நூலகத்தின் தினசரி நடவடிக்கைகள், தொழில்முறை தகுதி பெற்ற நூலகர் மூலமாக கண்காணிக்கப்படுகிறது.

நூலகத்தின் தரைதளத்தில் நூல் வழங்கும் பிரிவு, ஆதிதிராவிட புத்தக வங்கிப் பிரிவு மற்றும் மற்றும் முதுநிலை சட்டப்படிப்பு நூல்கள் பிரிவு உள்ளது. முதல் தளத்தில் சட்டப் பருவ இதழ்கள் பிரிவு மற்றும் குறிப்புதவி பிரிவு மற்றும் மின் மண்டலம் ஆகியவை உள்ளன.

  • வாசிப்பு அறை பயனாளர்கள்  –  100 / நாள்
  • புரவலர் (நூல் வழங்குதல்) பயனாளர்கள் –  150 / நாள்
  • புத்தக வாசிப்பாளர்கள்                                  –  250 / நாள்
  • மின் மண்டலம் ( E – Zone ) பயனாளர்கள் – 10 முதல் 25 / நாள்

நூலக நேரம்

காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை

நோக்கம்:

புதிய முறைகளை பயன்படுத்தி நூலக பயனாளார்களை நிறைவு செய்வது மற்றும்  சிறந்த / புதிய புத்தகங்களை நூலகத்தில் வாங்கியும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறிவை மேம்படுத்துவதும் இக்கல்லூரி நோக்கமாகும்.

இலக்கு:

இக்கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆராய்ச்சி/கற்பித்தல் சம்பந்தப்பட்ட தேவைகளை நிறைவேற்ற தரமான தகவல்களை சிறந்த முறையில் வழங்குவது.