நூல் வழங்கும் பிரிவு சேவைகள் :

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நூல்கள் வழங்குதல் மற்றும் திரும்ப பெறுதல்

  1. இக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் பிறகு மாணவ / மாணவியருக்கு இரண்டு நூலக அட்டைகள் வழங்கப்படும். ஒவ்வொரு அட்டைக்கும் ஒரு புத்தகம் வீதம் இரண்டு அட்டைகளுக்கும் இரண்டு புத்தகங்கள் வழங்கப்படும்.
  2. மாணவர்கள் நூலகத்தில் புத்தகங்களை பெறுவதற்கு நூலக அட்டையை சமர்பித்தல் வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொண்ட புத்தகங்களை நூலகத்தில் ஒப்படைத்த பிறகு நூலக அட்டைகள் மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படும்.
  3. நூல்களின் பெயர்கள் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பெயர், வகுப்பு மற்றும் நாள் ஆகியவை அடங்கிய விண்ணப்பப்படிவமானது மாணவர்களுக்கு வழங்கப்படும். நூல்கள் பெற விரும்பும் மாணவர்களை மேற்கண்ட படிவத்தை பூர்த்தி செய்து, அந்நூலகப் பிரிவில் உள்ள ஊழியரிடம் அளித்தபிறகு அம்மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்படும்.
  4. நூல்கள் வழங்குதல் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவை காலை 10.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.
  5. மாணவர்களால் கோரப்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் இல்லையெனில்,வேறு நூலாசிரியரின் பெயரினை மேற்கண்ட விண்ணப்பப் படிவத்தில் மறுபுறம் / பின்புறம் எழுதி கொடுத்து புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம்.
  6. புத்தகத்தினை உரிய தேதியில் செலுத்தாவிட்டால் அப்புத்தகத்திற்கு அபராதம் வசூலிக்கப்ப்படும். புத்தகத்தின் இறுதி தேதியானது விடுமுறை நாட்களில் வந்தால், அப்புத்தகத்திற்கு அவ்விடுமுறை நாட்களுக்கான (2 நாட்கள்) அபராதம் கிடையாது. அப்புத்தகத்தினை உடன் வருகிற வேலைநாளில் நூலகத்தில் திருப்ப ஒப்படைக்க வேண்டும். தொடர்சியான விடுமுறை நாட்கள் ஏதேனும் வர விரும்பின் நூலகத்தில் பெற்ற புத்தகங்ககளை அவ்விடுமுறை நாட்களுக்கு முன்னரே நூலகத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
  7. மாணவர்கள் நூலகத்தில் பெற்ற புத்தகங்களை மூன்று வாரங்கள் வரை தங்களிடம் வைத்துப் பயன் பெறலாம். அப்புத்தகங்கள் தேவைப்பட்டால் மேலும் மூன்று முறை புதுப்பித்து கொள்ளலாம்.

குறிப்புதவிப் பிரிவு சேவைகள்:

மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து குறிப்புதவிப் பிரிவில் குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம். .குறிப்புதவி பிரிவு புத்தகங்கள் எக்காரணம் கொண்டும் நூலகத்திலிருந்து வழங்கப்படமாட்டாது.

ஆதிதிராவிட புத்தக வங்கி பிரிவு சேவைகள்: 

ஆதிதிராவிட புத்தக வங்கி பிரிவு ஒரு தனிபிரிவாக இக்கல்லூரி நூலகத்தில் செயல்படுகிறது. ஏழ்மை நிலையில் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவியற்கு இக்சேவையானது வழங்கப்படுகிறது. .

தற்போதய விழிப்புணர்வு சேவைகள்:

புதிதாக வாங்கப்பட்ட புத்தகங்கள் / சட்ட இதழ்கள் ஆகியவற்றை பற்றி மாணவர்கள் / பேராசிரியர்களுக்கு தெரிவித்தல்.

தரவுதள பயிற்சி சேவை:  

சட்ட தரவுதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி விளக்கங்கள் அளித்தல்.