1. மாணவர்கள் தங்களின் சொந்த வேலை காரணங்களால் கல்லூரிக்கு வரவில்லை எனும் காரணத்தினை கூறி புத்தகங்களை கால தாமதமாக நூலகத்தில் திரும்ப செலுத்தச் கூடாது. அதிக அளவில் மாணவர்கள் கோரும் புத்தகங்களை (Books on demand) நூலகத்தில் பெற்றுச் சென்றால் அப்புத்தகங்களை நூலகத்தில் கோரும் போது உடனடியாக திரும்பச் செலுத்த வேண்டும்.
  1. மாணவர்கள் நூலகத்திலிருந்து பெற்ற புத்தகங்களை மீண்டும் மூன்று வாரங்களுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம்

அ.  புதுப்பித்தல் படிவம் உரிய தேதிக்கு 2 நாட்களுக்கு முன் நூலகத்தில்
பெற்றுச் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.

ஆ. மற்ற மாணவர்களால் குறிப்பிட்ட புத்தகம் கோரப்படாமல் உள்ளபோது
மாணவர்கள் தங்களுக்கு தேவையான நூலகத்திலிருந்து பெற்ற
புத்தங்களை மேலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இ மாணவர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்கள் நூலகத்தில்
இல்லாமல் வேறு மாணவர்கள் பெற்றுள்ள பொழுது
அப்புத்தகத்திற்கான முன்பதிவு செய்யலாம்.

  1. நூல் வழங்கும் பிரிவிலிருந்து புத்தகத்தினை பெற்றுச் செல்லும் போது புத்தகத்தின் ஏதேனும் சேதம் உள்ளதா என சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் புத்தகங்கள் திரும்பச் செலுத்தும் பொழுது சேதம் ஏதேனும் கண்டறியப்பட்டால் மாணவர்கள் பெற்றுச் சென்ற புத்தகத்தின் புதிய பிரதியினை நூலகத்திற்கு பெற்று வழங்க வேண்டும்.
  1. மாணவர்கள் புத்தகத்தினை தொலைத்து விட்டால், நூலத்தில் அப்புத்தகத்தின் பிதிய பிரியதினையோ அல்லது அப்புத்தகத்திற்கான விலையினை 5 மடங்காக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லையெனில் மாற்றுச் சான்றிதழ்  (T C ) வழங்கப்பட மாட்டது.
  1. 10 தொகுதிக்ள் கொண்ட புத்தகத்தின் ஒரு புத்தகத்தினை தொலைத்தால் கூட மொத்த தொகுதிகளுக்கான தொகையினை நூலகத்தில் செலுத்துதல் வேண்டும்.
  1. நூலக அபராதம் ஏதேனும் இருப்பின் அதனை உடனுக்குடன் செலுத்த வேண்டும். அவ்வாறு நூலக அபராதம் செலுத்தாத மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது.
  1. நூலகத்திலிருந்து பெறப்படும் புத்தகங்கள் கண்டிப்பாக கல்வியாண்டின் இறுதி வேலை நாளன்று நூலத்தில் ஒப்படைக்க வேண்டும்
  1. நூலகத்திலிருந்து பெறப்பட்ட புத்தகங்கள் உரிய தேதிக்குள் திருப்பி அளிக்காவிட்டால் நாளொன்றுக்கு ரூ.2/- வீதம் ஒரு புத்தகத்திற்கு அபாரதமானது வசூலிக்கப்படும்.
  1. மாணவர் சேர்க்கை சமத்தில் கட்டணத் தொகையோடு செலுத்தப்படும் நூலக காப்புக் கட்டணம், நூலக நிலுவை ஏதுமில்லை எனில் அம்மாணவர்களுக்கு தாங்கள் படித்து முடித்தபின் திரும்ப வழங்கப்படும்.
  1. மாணவர்கள் தங்கள் நூலக அட்டையினை மற்ற மாணவர்களின் நூலக அட்டையில் புத்தகங்களை எடுத்தல் கூடாது.
  1. சட்டப் பருவ இதழ்களை மாணவர்கள் எக்காரணத்திற்காகவும் சேதப்படுத்தக் கூடாது அவ்வாறு சட்டப் பருவ இதழ்களுக்கு ஏதேனும் சேதம் நேரினால் அக்சட்டப் பருவ இதழினை புதிதாக பெற்று நூலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கவில்லை எனில் அம்மாணவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  1. நூலக புத்தகங்களில் ஏதேனும் எழுதுதல், அடிக்கோடிடுதல் புத்தங்களை கிழித்தல் ஆகியவற்றை அறவே செய்யக் கூடாது. மேற்கண்டவற்றில் ஏதேனும் கண்டாறியப்பட்டால் அப்புத்தகத்தின் புதிய பிரதியினை நூலகத்திற்கு பெற்றுத் தர வேண்டும்.
  1. நூலகத்தில் சாப்பிடுதல், மது அருந்துதல் ஆகியவற்றிற்கு அறவே அனுமதி கிடையாது. மீறினால் புகார் அளிக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  1. நூலகத்தில் புகை பிடிப்பதற்கு அனுமதி கிடையாது. மீறினால் மீறுபவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க்ப்படும்.
  1. நூலகத்தில் மாணவர்களின் மிக அமைதியாக மற்றும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுதல் வேண்டும்.